அரக்கோணம் அருகே, அரிசி ஆலையில் 10 கொத்தடிமைகள் மீட்பு


அரக்கோணம் அருகே, அரிசி ஆலையில் 10 கொத்தடிமைகள் மீட்பு
x
தினத்தந்தி 17 July 2020 3:30 AM IST (Updated: 17 July 2020 7:45 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே அரிசி ஆலையில் 10 பேர் கொத்தடிமைகளை மீட்டனர்.

அரக்கோணம், 

அரக்கோணம் அருகே பங்காரம்மாகண்டிகை பகுதியில் உள்ள அரிசி ஆலையில் 10 பேர் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் அரக்கோணம் உதவி கலெக்டர் பேபி இந்திரா (பொறுப்பு), தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் அரிசி ஆலைக்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு ஆய்வு நடத்திய போது, 4 ஆண்கள், 4 பெண்கள், 2 குழந்தைகள் ஆக மொத்தம் 10 பேர் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருவது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து 10 பேரையும் மீட்டு, அவர்களை அரக்கோணம் தாலுகா அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், முக கசவம் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினிக்கு தகவல் தெரிவித்து, மீட்கப்பட்ட 10 பேரையும் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story