மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 95.94 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி - மாநில அளவில் 6-வது இடத்திற்கு முன்னேற்றம்
திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 95.94 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதன்மூலம் திருச்சி மாவட்டம் மாநில அளவில் 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் 2019-20-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வினை 250 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 31,048 மாணவ-மாணவிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதில் 12,991 மாணவர்கள், 16,796 மாணவிகள் என மொத்தம் 29,787 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 95.94 சதவீத தேர்ச்சி ஆகும்.
கடந்த கல்வியாண்டில் திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 மாணவ-மாணவிகள் தேர்ச்சி விகிதம் 93.56 சதவீதம் ஆக இருந்தது. இந்த ஆண்டு 2.4 சதவீதம் மாணவ-மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி அடைந்துள்ளதால் திருச்சி மாவட்டம் மாநில அளவில் 13-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
அரசு பள்ளிகள் மற்றும் பழங்குடியினர், ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் 10,049 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 8,321 பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர். இது 92.75 சதவீத தேர்ச்சி ஆகும். கடந்த ஆண்டை விட கூடுதலாக 4.5 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர். மாற்றுத் திறனாளி மாணவ-மாணவிகள் 160 பேர் தேர்வு எழுதினர். இதில் 154 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 250 மேல்நிலைப்பள்ளிகளில் 82 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளன. இதில் அரசு பள்ளிகள் 14, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகள் 3, நிதியுதவி பெறும் பள்ளிகள் 22, தனியார் பள்ளிகள் 43 ஆகும். இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ்-2 தேர்வு முடிவினை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு நேற்று காலை வெளியிட்டார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாந்தி உடன் இருந்தார். கடந்த ஆண்டை விட மாணவ-மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று இருப்பதால் முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

Related Tags :
Next Story