ஆத்தூர் ஒன்றியத்தில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்


ஆத்தூர் ஒன்றியத்தில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
x
தினத்தந்தி 17 July 2020 10:27 AM IST (Updated: 17 July 2020 10:27 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி உள்ளிட்டோரின் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

ஆத்தூர்,

ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசம்பட்டி, மேல்நாடு, மண்ணூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு ஆகிய மாற்று கட்சியினர், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவரும், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான ஆர்.இளங்கோவன், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி ஆகியோரின் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

குறிப்பாக இடையப்பட்டி, மண்ணூர், மொரசம்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து மாற்று கட்சிகளை சேர்ந்த மண்ணூர் சடையன், ராஜேந்திரன், சின்னதம்பி, தீர்த்தன் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில், பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மோகன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ரமேஷ், தெற்கு ஒன்றிய செயலாளர், முருகேசன் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.சின்னதம்பி, ஊராட்சி மன்ற தலைவர்கள் வாசுதேவன், சக்திவேல், முருகேசன், பால் கூட்டுறவு சங்க தலைவர்கள் போது மணி இளங்கோ, விஜயகுமார், வனக்குழு தலைவர் வெற்றிமணி, குருசாமி ,கருத்திருமன், ராமன், தனசேகரன், பால்ராஜ், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயகாந்தன், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story