பிளஸ்-2 தேர்வில் 92.38 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி; மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி
சேலம் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 92.38 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களை விட மாணவிகள் 5.8 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சேலம்,
தமிழக அரசின் இணையதளத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என 324 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் 16,232 பேரும், மாணவிகள் 19,385 பேரும் என மொத்தம் 35 ஆயிரத்து 617 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.
இவர்களில் மாணவர்கள் 14,482 பேரும், மாணவிகள் 18, 422 பேரும் என மொத்தம் 32 ஆயிரத்து 904 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 92.38 சதவீதம் தேர்ச்சி ஆகும். அதாவது மாணவர்கள் 89.22 சதவீதமும், மாணவிகள் 95.03 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே 5.8 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 90.64 சதவீதம் தேர்ச்சி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மாவட்டத்தில் 88 மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அதேபோல், அரசு நிதி உதவி பெறும் 22 பள்ளிகளில் இருந்து 5,089 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இவர்களில் 4,818 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.67 சதவீதம் தேர்ச்சி ஆகும். அரசு உதவி பெறும் பள்ளிகளை பொறுத்தவரையில் சேலம் அரிசிபாளையம் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் 145 அரசு மேல்நிலைப்பள்ளிகள் இருந்தாலும் 7 பள்ளிகள் மட்டுமே பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. நட்டுவம்பாளையம், சிந்தாமணியூர், குண்டுக்கல், தாண்டவராயபுரம் ஆகிய ஊர்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள், காடையாம்பட்டி, பனமரத்துப்பட்டியில் உள்ள அரசு மாதிரிப்பள்ளிகள், வீரகனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 7 அரசுப்பள்ளிகள் பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

Related Tags :
Next Story