விருத்தாசலம் அருகே இளம்பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் உள்பட 3 பேர் கைது


விருத்தாசலம் அருகே இளம்பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 July 2020 11:53 AM IST (Updated: 17 July 2020 11:53 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே இளம்பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் உள்பட 3 பேர் கைது.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த எருமனூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்(வயது 28). இவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலத்தை சேர்ந்த ஷோபனா(26) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். ஷோபனாவிடம் வரதட்சணை கேட்டு, கணவர் விஜயகுமார், மாமனார் அன்பழகன்(53), மாமியார் செல்வராணி(46) ஆகியோர் துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஷோபனா, தனது கணவருக்கும், வேறு பெண்ணுக்கும் தொடர்பு உள்ளதாகவும், தன்னை கணவர், மாமியார், மாமனார் ஆகியோர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாகவும், தற்கொலைக்கு தூண்டிய யாரையும் சும்மா விடாதீர்கள் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு அதை சமூக வலைத்தளத்தில் தனது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் அனுப்பியுள்ளார். பின்னர் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷோபனாவை தற்கொலைக்கு தூண்டியதாக விஜயகுமார், அன்பழகன், செல்வராணி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story