பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 87.08 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி


பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 87.08 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
x
தினத்தந்தி 17 July 2020 12:30 PM IST (Updated: 17 July 2020 12:30 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 87.08 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, மத்தூர் என 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் 9,100 மாணவர்களும், 10,080 மாணவிகளும் என மொத்தம் 19,180 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

இவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், 7,563 மாணவர்களும், 9,139 மாணவிகளும் என 16,702 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி 87.08 சதவீதம் ஆகும். தேர்வு முடிவு வெளியானதையொட்டி கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒட்டப்பட்டிருந்த தேர்வு முடிவுகளை மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து தெரிந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 அரசு பள்ளிகள் மற்றும் 33 தனியார் பள்ளிகள் என மொத்தம் 35 பள்ளிகளில் படித்த அனைத்து மாணவ, மாணவிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல்வேறு வகையான மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் என மொத்தம் 78 பேர் தேர்வு எழுதினர். இதில் 63 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Next Story