நத்தம் அருகே கோவில் காளை சாவு


நத்தம் அருகே கோவில் காளை சாவு
x
தினத்தந்தி 18 July 2020 6:32 AM IST (Updated: 18 July 2020 6:32 AM IST)
t-max-icont-min-icon

கோவிலுக்கு சொந்தமான காளை ஒன்று வயது முதிர்வு காரணமாக நேற்று இறந்தது.

செந்துறை,

நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சி மஞ்சநாயக்கன்பட்டியில் ஸ்ரீ மந்தை முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான காளை ஒன்று வயது முதிர்வு காரணமாக நேற்று இறந்தது. இதையடுத்து பொதுமக்கள், கோவிலின் முன்பு காளையின் உடலை வைத்து மலர் அஞ்சலி செலுத்தினர். மேலும் வைதீக முறைப்படி சடங்குகள் செய்து, மேள தாளம் முழங்க கோவிலுக்கு அருகிலேயே காளையை அடக்கம் செய்தனர். அஞ்சலி செலுத்திய கிராம மக்கள், தங்களது துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் ‘கருப்பு பேட்ஜ்‘ அணிந்திருந்தனர். இந்த காளை, பல்வேறு ஊர்களில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story