திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் திடீர் சாவு


திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் திடீர் சாவு
x
தினத்தந்தி 17 July 2020 10:15 PM GMT (Updated: 2020-07-18T06:40:57+05:30)

வில்லியனூர் அருகே திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் திடீரென உடல்நலக்குறைவால் பரிதாபமாக இறந்துபோனார்.

வில்லியனூர், 

வில்லியனூர் அருகே ஒதியம்பட்டை சேர்ந்தவர் சிவகாமி. இவருடைய மகள் நித்யா (வயது 22). இவருக்கும், கடலூரை சேர்ந்த மணிகண்டன் (34) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பின் மணிகண்டன் குடும்பத்துடன் கடலூரில் நித்யா வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி திடீரென்று நித்யாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், திடீரென்று நித்யா பரிதாபமாக இறந்துபோனார்.

இதை அறிந்த சிவகாமி மற்றும் உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். பின்னர் மகளின் சாவு குறித்து வில்லியனூர் போலீசில் சிவகாமி புகார் செய்தார். அதில், தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 6 மாதமே ஆன நிலையில் புதுப்பெண் இறந்துபோனது குறித்து வில்லியனூர் துணை தாசில்தார் விமலனும் விசாரித்து வருகிறார்.

Next Story