பிரதமரின் விபத்து காப்பீடு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் ஆட்டோ டிரைவர்களுக்கு வானதிசீனிவாசன் வழங்கினார்
பிரதமரின் விபத்து காப்பீடு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் ஆட்டோ டிரைவர்களுக்கு வானதிசீனிவாசன் வழங்கினார்.
கோவை,
கோவை டாடாபாத் பகுதியில் உள்ள கோவை மக்கள் சேவை மையம் சார்பில் பிரதமரின் விபத்து காப்பீடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தலைமை தாங்கி சிவானந்தா காலனியில் விபத்து காப்பீடு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஆட்டோ டிரைவர்களுக்கு வழங்கினார். அப்போது விபத்து காப்பீடு என்றால் என்ன? என்று அங்குள்ள ஆட்டோ டிரைவர்களுக்கு விளக்கி கூறினார்.
அப்போது அவர் பேசும்போது, இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 12 ரூபாய் ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் சேர்க்கப்படும். விபத்து ஏற்பட்டால் 45 நாட்களுக்குள் 2 லட்சம் ரூபாய் வரை காப்பீடு கிடைக்கும். இதை மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திரமோடி இதுபோன்ற பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இந்த திட்டம் முதலில் ஆட்டோ டிரைவர்களை கொண்டு செயல்படுத்தி இருக்கிறோம் என்றார். இந்த நிகழ்ச்சியில், டாக்டர் கார்த்திக் பிரபு, மற்றும் நிர்வாகிகள் கண்ணன் தேவராஜ், கண்மணி பாபு, மாநில ஊடக பிரிவு செயலாளர் சபரிகிரிஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story