சித்தாலப்பாக்கம் ஏரியில் குப்பைகளை 4 வாரத்துக்குள் அகற்ற வேண்டும் ஐகோர்ட்டு காலக்கெடு
சித்தாலப்பாக்கம் ஏரியில் குப்பைகளை 4 வாரத்துக்குள் அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், முத்துக்குமரன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவை கடந்த மாதம் விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர். சுரேஷ்குமார் ஆகியோர், சித்தாலப்பாக்கம் ஏரியில் குப்பைகளை கொட்ட தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தடையை மீறி பஞ்சாயத்து நிர்வாகம் ஏரியில் மீண்டும் குப்பைகளை கொட்டி மாசுபடுத்தி வருவதாக மனுதாரர் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், “சித்தாலப்பாக்கம் ஏரியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை பஞ்சாயத்து நிர்வாகம் 4 வாரங்களில் அப்புறப்படுத்த வேண்டும். இந்தப்பணியை மெத்தனப்போக்குடன் செய்யாமல், எடப்பாடி, நாமக்கல், ராசிபுரம், குமாரப்பாளையம் ஆகிய நகராட்சிகள் குப்பைகளை எவ்வாறு திடக்கழிவு மேலாண்மை விதிகளைப் பின்பற்றி சிறப்பாக அறிவியல் பூர்வமாக அப்புறப்படுத்தி வருகிறதோ, அதேப்போல சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத வண்ணம் அப்புறப்படுத்த வேண்டும். இந்தப்பணிகளை செய்து முடித்தது குறித்து புகைப்பட ஆதாரங்களுடன் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர், தாம்பரம் நகராட்சி ஆணையர், சித்தாலப்பாக்கம் பஞ்சாயத்து சிறப்பு அதிகாரி உள்ளிட்டோர் ஆகஸ்டு20-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்”என்று உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story