தி.மு.க. நடத்தும் போராட்டம் நீதிமன்ற அவமதிப்பு ஆகாது அமைச்சர் பாண்டியராஜனுக்கு, ஆர்.எஸ்.பாரதி எம்.பி. பதில்
தி.மு.க. சார்பில் 21-ந்தேதி நடத்தப்படும் போராட்டம் நீதிமன்ற அவமதிப்பு ஆகாது என்று அமைச்சர் கே.பாண்டியராஜனுக்கு, ஆர்.எஸ்.பாரதி எம்.பி. பதில் அளித்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மின் கட்டணத்தை குறைக்ககோரி கருப்பு கொடி போராட்டம் என்றால் நீதிமன்ற அவமதிப்பாக இருக்கலாம் என அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சட்டத்தையும், நீதிமன்றத்தையும் எந்நேரத்திலும், எக்காலத்திலும் மதித்து நடக்கும் இயக்கம் தி.மு.க. என்பதையும், தி.மு.க. மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதையும் அறியாத அமைச்சர் பாண்டியராஜன் நீதிமன்ற அவமதிப்பு என்ற பூச்சாண்டி காட்டியிருக்கிறார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்டச்செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ‘மத்தியப்பிரதேசம், கேரளா, மராட்டியம் போன்ற மாநிலங்களே கொரோனா கால மின் கட்டண சலுகைகளை அறிவித்துள்ள நிலையில், அ.தி.மு.க. அரசு மட்டும் முறையாகவே கணக்கிட்டுள்ளோம் என்று உயர்நீதிமன்றத்தின் முன்பு வாதாடிவிட்டு, இப்போது அதையே விளக்கமாக செய்திக்குறிப்பு ஒன்றை கொடுத்திருப்பது பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பற்றி கவலை கொள்ளாத கருணையற்ற போக்காகும்.
மத்தியப்பிரதேசம், கேரளா, மராட்டியம் போன்ற மாநிலங்களைப்போல கொரோனா கால மின் கட்டண சலுகைகளை தமிழக மக்களுக்கு அளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தித்தான் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் வருகிற 21-ந்தேதி என்பதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார் அமைச்சர் பாண்டியராஜன். இது எப்படி நீதிமன்ற அவமதிப்பு ஆகும். மக்களுக்காக, மக்கள் நலனுக்காக மாநில அரசிடம் கோரிக்கை வைத்து அறவழி ஆர்ப்பாட்டத்தை நடத்துவது எப்படி நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.
அதோடு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு ரத்து போன்ற மக்களுக்கான நன்மைகளை செயல்படுத்திட, தி.மு.க. நீதிமன்றத்தை நாடி, அதன் மூலம் எச்சரிக்கப்பட்டு, அதன் பின்பு ஆளும் அ.தி.மு.க. அரசு செயல்படுத்தியதிலிருந்தே, நீதிமன்றத்தை தி.மு.க. எப்படி மதிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். அத்துடன் அமைச்சர் பாண்டியராஜனின் கட்சியின் தலைவி முதல் அக்கட்சியினரின் ஊழல்களையும், தில்லுமுல்லுகளையும் தி.மு.க. நீதிமன்றத்தின் மூலம் அம்பலப்படுத்தியுள்ளது.
மக்களுக்காக, மக்கள் நலனுக்காக மாநில அரசிடம் கோரிக்கை வைத்து அறவழி ஆர்ப்பாட்டத்தை நடத்துவது எந்த வகையிலும் நீதிமன்ற அவதிப்பு ஆகாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story