நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை - அனில் தேஷ்முக் தகவல்
சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என அனில் தேஷ்முக் கூறியுள்ளாா்.
மும்பை,
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தொழில்போட்டி காரணமாக ஏற்பட்ட மன அழுத்ததால் தான் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என அவரது காதலி ரியா சக்ரபோர்தி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்தநிலையில் சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், " மும்பை போலீசாருக்கு விசாரணை நடத்த திறன் உள்ளது. அவர்கள் சரியான பாதையில் விசாரணையை நடத்தி வருகின்றனர். எல்லா கோணங்களிலும் வழக்கை விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிந்த பிறகு அனைத்து தகவல்களும் வெளியிடப்படும்" என்றார்.
இதற்கிடையே நேற்று மும்பை போலீசார் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பாக யாஷ்ராஜ் பட நிறுவன அதிபரும், பிரபல தயாாிப்பாளருமான ஆதித்யா சோப்ராவிடம் வெர்சோவா போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அவரிடம் போலீசார் சுஷாந்த் சிங் ராஜ்புத் கையெழுத்திட்ட பட ஒப்பந்தம் குறித்த தகவல்களை கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டனர்.
பின்னர் 4 மணி நேரம் கழித்து ஆதித்யா சோப்ரா போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.
ஏற்கனவே போலீசார் இந்த வழக்கு தொடர்பாக நடிகரின் காதலி ரியா சக்ரபோர்தி, சக நடிகர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டவா்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story