ராணிப்பேட்டை மாவட்டத்தில், வருவாய் தீர்வாய மனுக்கள் 31-ந்தேதி வரை வழங்க கால அவகாசம் - கலெக்டர் திவ்யதர்ஷினி தகவல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருவாய் தீர்வாய மனுக்கள் கால அவகாசம் 31-ந்தேதி வரை வழங்க நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6-ந்தேதி முதல் 6 வருவாய் வட்டங்களில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடந்து வருகிறது. தற்போது பரவி வரும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலர்களிடம் நேரில் அளிக்காமல், இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க அரசு ஆணை வெளியிட்டதின்பேரில், கடந்த ஜூன் மாதம் 29-ந்தேதி முதல் வருகிற 15-ந்தேதி வரை பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை இணையதளம் மூலமாக அனுப்பலாம்.
கொரோனா ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை நீட்டித்துள்ளதால், வருவாய் தீர்வாய மனுக்கள் பொதுமக்களால், 15-ந்தேதிக்குள் மனுக்களை அனுப்ப முடியாததால், அதற்கான கால அவகாசம் வருகிற 31-ந்தேதி வரை வருவாய் நிர்வாக ஆணையரால் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா, ஆற்காடு, சோளிங்கர், கலவை, நெமிலி மற்றும் அரக்கோணம் வட்டங்களில் பொதுமக்கள் வருகிற 31-ந்தேதி வரை தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலருக்கு இணையதளம் மூலமாக அனுப்பி பயன் பெறலாம். இந்தத் தகவலை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story