திமுக எம்.எல்.ஏ. கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி
வேலூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர்,
வேலூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் கார்த்திகேயன் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காராணமாக தனது வீட்டிலேயே தனிமைபடுத்திக் கொண்டு இருந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இன்று வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பொது முடக்கக் காலத்தில் பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி வந்த இவருக்கு, ஏற்கெனவே தொற்று உறுதியானவர் மூலமாகவே பரவியிருக்கலாம் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, கார்த்திகேயன் வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் ஏற்கெனவே 14 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது கார்த்திகேயனையும் சேர்த்து 15 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :
Next Story