திருவொற்றியூரில் நள்ளிரவில் போலீஸ் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை
திருவொற்றியூரில் நள்ளிரவில் போலீஸ் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர்
திருவொற்றியூர் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான கட்சி அலுவலகம் திருவொற்றியூர் தேரடியில் உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்த நகர தலைவர், த.மா.கா.வில் இணைந்த பிறகு கட்சி அலுவலகம் யாருக்கு சொந்தம்? என்ற தகராறு ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியிடம் அலுவலகம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்த 30-க்கும் மேற்பட்ட நாற்காலிகளை யாரோ திருடிச்சென்று விட்டதாக திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் ஏற்பாட்டில் நாற்காலிகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மீண்டும் பூட்டை உடைத்து வேறு பூட்டு போடப்பட்டிருந்தது. இதனை பார்த்த காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், அலுவலகத்தில் இருந்து நாற்காலிகளை எடுத்துச் சென்றவர் மீது போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால் இது நடந்திருக்காது என்று கூறியும், சம்பந்தப்பட்டவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் திருவொற்றியூர் போலீஸ் நிலைய வாசலில் அமர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், அம்பத்தூர் மகீந்திரன் ஆகியோரை வைத்து சமாதான பேச்சு நடத்தப்படும் என கூறியதையடுத்து தொண்டர்கள் கலைந்து சென்றனர்.
ஆனால் காங்கிரஸ் பிரமுகர், அவை தான் வாங்கி கொடுத்த நாற்காலிகள் என்பதால் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

Related Tags :
Next Story