ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் - கொரோனா தொற்றுக்கு 4 பேர் பலி
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் கொரோனா தொற்றுக்கு 4 பேர் பலியாகி உள்ளனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் வடக்கு சைதாப்பேட்டை தெருவைச் சேர்ந்தவர் பவானி (வயது 47). இவருக்கு சர்க்கரை நோய் இருந்தது. 16-ந்தேதி சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத் துவமனையில் அனுமதிக் கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப் பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது. அவரின் பிணத்தை சுகாதாரத் துறையினர் மீட்டு பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி அம்மூரில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா திருமணி ரோடு அன்னங்குடி கிராமத்தில் வசித்து வந்தவர் முருகேசன் (65). இவருக்கு, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் பாதிப்புக்காக 17-ந்தேதி நள்ளிரவு 12 மணியளவில் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். நேற்று முன்தினம் அதிகாலை 4.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
முன்னதாக அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப் பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது. அவரின் உடலை மருத்துவமனை நிர்வாகம் நேற்று காலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மாலை 5 மணியளவில் அவரின் பிணம் அன்னங்குடி கிராமத்துக்குக் கொண்டு வரப்பட்டு சுகாதாரத்துறையினர் அரசு விதிமுறை படி அடக்கம் செய்தனர்.
திருப்பத்தூர் ராஜன் தெருவைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன் (72). இவர், கொரோனா தொற்றுக்கு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். அதேபோல் திருப்பத்தூர் கலைஞர்நகரில் வசித்தவர் காமராஜ் (50). உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதையடுத்து திருப்பத்தூர் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story