இந்தி நடிகர் பிரதிக் காந்தி, மனைவிக்கு கொரோனா


இந்தி நடிகர் பிரதிக் காந்தி, மனைவிக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 July 2020 4:15 AM IST (Updated: 20 July 2020 7:03 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் இந்தி நடிகர் பிரதிக் காந்தி, அவரது மனைவி மற்றும் சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மும்பை பெருநகரம் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இங்கு அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், என அனைத்து தரப்பினரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மும்பையில் இந்தி திரையுலகையும் இந்த வைரஸ் மிரட்டி வருகிறது.

பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோர் இந்த நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், மும்பையை சேர்ந்த இந்தி நடிகர் பிரதிக் காந்தி, அவரது மனைவி பாமினி ஓஷா, சகோதரர் புனித் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இது குறித்து நடிகர் பிரதிக் காந்தி தனது டுவிட்டர் பதிவில், நானும், எனது மனைவியும் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறோம். எனது சகோதரர் புனித் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார் என கூறி உள்ளார். மேலும் நாங்கள் கொரோனாவுக்கு எதிரான வலிமையான போராட்டத்தை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் பிரதிக் காந்தி மிட்ரான், லவ்யாத்ரி உள்ளிட்ட இந்தி படங்களிலும், பே யார், ராங் சைட் ராஜூ, லவ் நி பவாய் உள்ளிட்ட குஜராத்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

Next Story