மேலும் 2 பேர் உயிரிழப்பு: நெல்லை-தூத்துக்குடியில் புதிதாக 380 பேருக்கு கொரோனா தென்காசியில் 103 பேருக்கு தொற்று உறுதி
நெல்லை, தூத்துக்குடியில் புதிதாக 380 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. தென்காசியில் 103 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 180 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 20 பேர் நெல்லை மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அம்பை, சேரன்மாதேவி, களக்காடு, விக்கிரமசிங்கபுரம், நாங்குநேரி, இடையன்குளம், மானூர், ராதாபுரம், பாப்பாக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,783-ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,314 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,458 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நெல்லை மாநகர பகுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு வேறு யாரும் செல்ல அனுமதி கிடையாது. அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு கொரோனா பரிசோதனை மும்முரமாக நடந்து வருகிறது. மேலும், அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
கங்கைகொண்டானில் உள்ள கொரோனா பரிசோதனை மையம், சோதனைச்சாவடி மற்றும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் இடங்களில் சுகாதார மேற்பார்வையாளர் சோமசுந்தரம் தலைமையில் சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்த மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,200-ஆக அதிகரித்து உள்ளது. இதில் 433 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதி 764 பேர் மட்டும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த 55 வயது பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில், அந்த பெண்ணுக்கு தொற்று பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த பெண் நேற்று பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் 150 பேருக்கு சளி மாதிரிகள் சேகரித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மார்க்கெட்டுக்கு சென்றனர். அங்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட வியாபாரிகளின் கடைகளை மூடினார்கள். தொடர்ந்து அவர்களை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். மற்ற கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன. அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
மேலும், கடந்த ஒரு வாரமாக இந்த மார்க்கெட்டில் காய்கறி வாங்கிய பொதுமக்கள் ஏதேனும் கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு வருமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மார்க்கெட் வியாபாரிகள் உள்பட 200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். காயல்பட்டினம், ஆறுமுகநேரி, பள்ளிபத்து, திருச்செந்தூர், நங்கைமொழி, உடன்குடி, பிச்சிவிளை, ஆத்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், வீரபாண்டியன்பட்டினம், நாசரேத், குரும்பூர், கட்டாலங்குளம், ஆழ்வார்திருநகரி, சங்கரலிங்கபுரம், கோவில்பட்டி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,643-ஆக அதிகரித்து உள்ளது. இதில் 1,541 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் கோவில்பட்டியை சேர்ந்த ஒருவரும் நேற்று கொரோனா பாதிப்பு காரணமாக இறந்து உள்ளார். இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்து உள்ளது.
தொழிலதிபரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கலக்கம்
பணகுடியை சேர்ந்த 53 வயது தொழிலதிபர் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி இருந்தது. இதனால் அவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இருந்த போதிலும் அவருக்கு காய்ச்சல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதனை தொடர்ந்து அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடலை உறவினர்களிடம் ஆஸ்பத்திரி நிர்வாகம் ஒப்படைத்தது. தொடர்ந்து இரவு பணகுடியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலையில் அவருக்கு ஏற்கனவே எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவு வந்தது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கலக்கத்தில் உள்ளனர். இதனை அறிந்த பணகுடி சுகாதார துறையினர் மற்றும் நகர பஞ்சாயத்து நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்ட தொழிலதிபர் வீடு, தெருக்களில் கிருமி நாசினி தெளித்தனர். மேலும் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும், சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் பணகுடியில்பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story