குழந்தைக்கு பால் கொடுக்க மறுத்த மனைவியை அடித்து கொன்ற பூசாரி கைது


குழந்தைக்கு பால் கொடுக்க மறுத்த மனைவியை அடித்து கொன்ற பூசாரி கைது
x
தினத்தந்தி 21 July 2020 3:08 AM IST (Updated: 21 July 2020 3:08 AM IST)
t-max-icont-min-icon

பிவண்டியில் குழந்தைக்கு பால் கொடுக்க மறுத்த மனைவியை அடித்து கொலை செய்த பூசாரியை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

தானே மாவட்டம் பிவண்டி பகுதியை சேர்ந்தவர் பஜன்சிங் சர்தார்(வயது25). குருத்வாராவில் பூசாரியாக உள்ளார். இவரது மனைவி பூஜா(23). இவர்களுக்கு 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் பூசாரி ஒரு வயது மகளுக்கு பால் கொடுக்குமாறு மனைவியிடம் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவர் மின்விசிறி ஸ்டாண்டை எடுத்து மனைவியை ஓங்கி அடித்தார். இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற நார்போலி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பூசாரி பஜன்சிங் சர்தாரை கைது செய்தனர்.

இதில் நேற்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டு அவரை 26-ந் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியது.

Next Story