தண்டவாளத்தையொட்டி நின்ற லாரி மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது பயணிகள் உயிர் தப்பினர்
காந்திவிலியில் லாரி மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் உயிர் தப்பினர்.
மும்பை,
மும்பை பாந்திரா டெர்மினசில் இருந்து நேற்று மதியம் அமிர்தசரஸ் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டு இருந்தது. இந்த ரெயில் பகல் 12.30 மணியளவில் காந்திவிலி பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது தண்டவாளத்தின் ஓரம் கட்டுமான பொருட்கள் ஏற்றி வந்த லாரி நின்று கொண்டு இருந்தது.
இதில் எதிர்பாராதவிதமாக ரெயில் என்ஜின், லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பயணிகள் உள்பட யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. எனினும் ரெயில் என்ஜினும், லாரியும் சேதமடைந்தன. இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் லாரியை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக மேற்கு ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி சுமிர் தாக்கூர் கூறினார்.
மேலும் விபத்து குறித்து அவர் கூறுகையில், “காந்திவிலியில் 5-வது தண்டவாளத்தையொட்டி நின்று கொண்டு இருந்த லாரி மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்தநிலையில் அந்த ரெயில் விபத்து நடந்த இடத்தில் இருந்து 45 நிமிடங்களுக்கு பிறகு புறப்பட்டு சென்றது” என்றார்.
காந்திவிலியில் லாரி மீது ரெயில் மோதிய விபத்து தொடர்பாக நடந்த முதல் கட்ட விசாரணைக்கு பிறகு காந்திவிலி ரெயில் நிலைய கண்காணிப்பாளர்கள் பி.வி. சாமந்த், வினோத் தால்வி, பாயின்ட்ஸ் மேன் பாரத் சோலங்கி, போக்குவரத்து ஆய்வாளர் எம்.எஸ். சேக் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Tags :
Next Story