கோவை அருகே கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர் கைது
கோவை அருகே கல்லூரி மாணவியை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் அந்த மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்ததால் போக்சோ சட்டமும் பாய்ந்தது.
பேரூர்,
கோவையை அடுத்த பேரூர் அருகே 17 வயது மாணவி, தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர்களது வீட்டின் அருகே வசித்து வருபவர் ரித்தீஷ் (24), கூலித்தொழிலாளி. இவர், அந்த மாணவியுடன் பழகினார். இதை பெற்றோர் கண்டித்ததால் அவர் ரித்தீசுடன் பழகுவதை நிறுத்தினார்.
இந்த நிலையில், கடந்த 17-ந் தேதி இரவு 8.30 மணியளவில் ரித்தீஷ், மாணவியின் வீட்டுக்கு சென்றார். வீட்டுக்கு வெளியே தந்தையுடன் நின்றபோது, அந்த மாணவியிடம் தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தினார். அவர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த ரித்தீஷ், அந்த மாணவியை கத்தியால் சரமாரியாக குத்தினார். அதை தடுக்க வந்த மாணவியின் தந்தைக்கும் கத்திக்குத்து விழுந்தது. ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது அந்த மாணவி பரிதாபமாக இறந்தார்.
வாலிபர் கைது
பின்னர் அவர் தனது செல்போனை சம்பவம் நடந்த இடத்திலேயே போட்டுவிட்டு தப்பிச்சென்றார். இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் தலைமறைவான ரித்தீசை பிடிக்க இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. போலீசார் ரித்தீசின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது கோவைப்புதூர் அருகே உள்ள ஒரு வனத்துறை சோதனை சாவடி அருகே நின்று கொண்டிருந்த ரித்தீசை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைதான ரித்தீஷ் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-
வனப்பகுதி வழியாக சென்றார்
அந்த மாணவிக்கு எனது வீட்டின் அருகில்தான் வீடு. எனவே அவரை நான் தினமும் பார்ப்பேன். பார்த்ததும் பிடித்து விட்டது. அவரும் என்னிடம் சகஜமாக பேசுவார். இதனால் நான் அவரை ஒருதலைபட்சமாக காதலித்தேன். உடனே எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் எனது காதலை ஏற்க மறுத்ததுடன், என்னிடம் பேசுவதையும் தவிர்த்துவிட்டார்.
எனவே எனக்கு கிடைக்காதவர் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பதால்தான் நான் அவரை கத்தியால் சரமாரியாக குத்தினேன். பின்னர் தன்னை போலீசார் பிடித்து விடுவார்களோ என்று நினைத்து எனது செல்போனை அங்கேயே போட்டுவிட்டு வனப்பகுதி வழியாக நடந்து மதுக்கரை சென்றேன்.
பாலக்காடு சென்றேன்
அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டு வாளையாறு சென்றேன். அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றேன். அவர்கள் என்னை பார்த்து அதிர்ச்சி அடைந்து, என்ன திடீரென்று வந்து உள்ளாய், என்று கேட்டனர். தற்போது கொரோனா என்பதால் வேலை இல்லை, உங்களையும் பார்க்க ஆசையாக இருந்தது எனவே வந்தேன் என்று கூறினேன்.
அப்போதுதான் அந்த மாணவி இறந்துவிட்டது எனக்கு தெரியவந்தது. எனவே நான் இங்கே இருப்பதை போலீசார் தெரிந்து கொண்டு வந்துவிடக்கூடாது என்பதற்காக மீண்டும் பாலக்காட்டில் இருந்து வனப்பகுதி வழியாக கோவை திரும்பினேன். வரும்போதுதான் கோவைப்புதூர் அருகே சோதனை சாவடியில் என்னை போலீசார் கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
போக்சோ சட்டம் பாய்ந்தது
மேலும் கைதான ரித்தீஷ் மீது போக்சோ சட்டமும் பாய்ந்து உள்ளது. இது குறித்து போலீசார் கூறும்போது, ரித்தீஷ் அந்த மாணவியிடம் தன்னை காதலிக்க வேண்டும் என்று நேரில் சந்தித்தும், செல்போன் மூலமாகவும் வற்புறுத்தி உள்ளார். எனவே அவரை காதலிக்க தொல்லை கொடுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் போக்சோ சட்டமும் பாய்ந்து உள்ளது என்றனர்.
ரித்தீசை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பாராட்டினார்.

Related Tags :
Next Story