நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு மனநல மருத்துவர்கள், சினிமா விமர்சகரிடம் போலீசார் விசாரணை


நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு மனநல மருத்துவர்கள், சினிமா விமர்சகரிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 July 2020 10:25 PM GMT (Updated: 21 July 2020 10:25 PM GMT)

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பாக போலீசார் மனநல மருத்துவர்கள், சினிமா விமா்சகரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

மும்பை,

34 வயது இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டது போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. எனினும் தொழில் போட்டி காரணமாக ஏற்பட்ட மனஅழுத்ததால் தான் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் நடிகரின் குடும்பத்தினர், நண்பர்கள், நடிகைகள் சஞ்சனா சாங்கி, காதலி ரியா சக்ரபோர்தி, இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 35 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அவர்களிடம் வாக்குமூலத்தையும் பதிவு செய்து உள்ளனர்.

இந்தநிலையில் போலீசார் இந்த வழக்கு தொடர்பாக நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு மனஅழுத்தத்திற்கு சிகிச்சை அளித்த மனநல மருத்துவர்கள் 3 பேர் மற்றும் உளவியலாளரிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் அபிஷேக் திரிமுகே கூறுகையில், ‘‘அவர்களிடம் கடந்த 3 முதல் 4 நாட்களாக பாந்திரா போலீசார் வாக்குமூலங்களை பதிவு செய்து வருகின்றனர்’’ என்றார்.

இதேபோல போலீசார் திரைப்பட விமர்சகர் ராஜீவ் மசாந்திடமும் விசாரணை நடத்தி உள்ளனர். இவரிடம் சுஷாந்த் சிங்கின் படத்திற்கு வழங்கிய விமர்சனம், மதிப்பீடுகள் குறித்து கேட்டு வாக்குமூலம் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

Next Story