தொடர்ந்து பொய்களை கூறுவதா? எம்.எல்.ஏ.க்கள் மனநல மருத்துவர்களை சந்திக்க வேண்டும் கவர்னர் கிரண்பெடி அறிவுரை


தொடர்ந்து பொய்களை கூறுவதா? எம்.எல்.ஏ.க்கள் மனநல மருத்துவர்களை சந்திக்க வேண்டும் கவர்னர் கிரண்பெடி அறிவுரை
x
தினத்தந்தி 22 July 2020 5:23 AM IST (Updated: 22 July 2020 5:23 AM IST)
t-max-icont-min-icon

புதுவை எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து பொய்களை கூறிவந்தால் மனநல மருத்துவர்களை சந்திக்க வேண்டி இருக்கும் என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

கவர்னர் கிரண்பெடி சமூக வலைத்தளத்தில் நேற்று கருத்து ஒன்றை பதிவிட்டு:ள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுவை சட்டசபையில் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., கவர்னர் கிரண்பெடி அரசு மருத்துவர்களை தரக்குறைவாக பேசி உள்ளார். இது 100 சதவீதம் தவறானவை. அதேபோல பஞ்சாபில் நான் வீட்டுக்கு வாடகை செலுத்தாததால், மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளதாக சட்டப்பேரவையில் சிலர் பேசி உள்ளனர். இதுவும் முற்றிலும் தவறானது.

அந்த வீட்டு உரிமையாளருக்கு உரிய வீட்டு வாடகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது இதனைப்பற்றி பேச வேண்டிய நேரம் இல்லை. இப்போது பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கும் நல்வாழ்விற்கும் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களை திசை திருப்பும் வகையில் தினமும் பொய்களை கூறி வருகின்றனர். அவர்கள் எதற்காக இப்படி கூறுகின்றனர் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் அப்படி பேசுவதை நிறுத்தாவிட்டால், பேசுவதை தடுப்பதற்கு தேவையான பொருத்தமான நடவடிக்கையை கவர்னர் மாளிகை எடுக்கும். அவர்கள் தொடர்ந்து பொய்களை கூறுவதால் புதுவையில் உள்ள மனநல மருத்துவர்களை சந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story