மின் கட்டணம் அதிகமாக வசூலிப்பதை கண்டித்து திருவள்ளூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மின் கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக அ.தி.மு.க. அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், கொரோனா நேரத்தில் மின்சார கட்டணத்தை பொதுமக்களிடம் அதிகமாக வசூலிப்பதாக கூறி, அ.தி.மு.க. அரசை கண்டித்து திருவள்ளூரில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு நேற்று தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு திருவள்ளூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன், நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் மகிமைதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க.வினர் அனைவரும் கையில் கருப்புக்கொடி ஏந்தி அ.தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
பேரம்பாக்கத்தில் திருவள்ளூர் மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் முரளி தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் தங்கள் வீடுகளுக்கு முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், வல்லூரில் உள்ள மீஞ்சூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் தலைமையில் கையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஒன்றிய அவைத்தலைவர் தன்சிங், மாவட்ட பிரதிநிதிகள் தமிழரசன், பாளையம், வடசென்னை அனல்மின் நிலைய திட்ட செயலாளர் ராமமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் சகாதேவன், வல்லூர்ரவி, நாகன் உள்பட பலர் சமூக இடைவெளியில் கலந்து கொண்டனர். அத்திப்பட்டு தி.மு.க. அலுவலகம் முன்பு ஊராட்சி எம்.டி.ஜி. கதிர்வேலும், மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, சோழவரம் வடக்கு ஒன்றியத்தில் செல்வசேகரன் ஆகியோர் கையில் கருப்புக்கொடியேந்தி முழக்கமிட்டனர்.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கவரைப்பேட்டையை அடுத்த பண்பாக்கத்தில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பிரதிநிதி ஆனந்த்குமார், ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம் உள்பட தி.மு.க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
ஊத்துக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் அப்துல்ரஷீத் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் அபிராமி குமரவேல், கலை மற்றும் பகுத்தறிவு அணி மாவட்ட அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரண்டூரில் ஆஞ்சநேயலு தலைமையிலும், அனைந்தேரியில் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் தில்லைகுமார், மாவட்ட கவுன்சிலர் சுதாகர் ஆகியோர், சீதஞ்சேரியில் ஒன்றிய துணை செயலாளர் நாகராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
எல்லாபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் கோடுவெளி குமார் தலைமையில் கோடுவெளி ஊராட்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெங்கல் பஜாரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் ஜி.பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ரஜினி, வார்டு செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மின்கட்டண உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பினர். பெரியபாளையம் அருகே ஆரணி பேரூர் தி.மு.க.சார்பில் பேரூர் செயலாளரும் முன்னாள் பேரூராட்சி தலைவருமான ஜி.பி.வெங்கடேசன் தலைமையில் அவரது வீட்டின் அருகே மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Tags :
Next Story