திருப்பூர் மாவட்டத்தில், நர்சிங் மாணவி உள்பட 34 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 541 ஆக உயர்வு
திருப்பூர் மாவட்டத்தில் நர்சிங் மாணவி உள்பட 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 541 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர்,
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டில் இல்லை. இதற்காக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து பல்வேறு கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 6-வது கட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை உள்ளது.
இருப்பினும் ஒரு சில பகுதிகளில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ளன. இதற்கிடையே தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்தையும் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 4 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் காங்கேயம் பழையகோட்டையை சேர்ந்த 28 வயது பெண், காங்கேயம் தேவாங்கபுரம் சரோஜினி தெருவை சேர்ந்த 14 வயது சிறுமி, வாய்க்கால்மேடு அமராவதி நகரை சேர்ந்த 6 வயது சிறுவன், 12 வயது சிறுவன், எஸ்.வி.காலனியை சேர்ந்த 29 வயது ஆண், தென்னம்பாளையம் காட்டுவலவை சேர்ந்த 42 வயது ஆண், திருப்பூர் மிஸ்சன் தெருவை சேர்ந்த 52 வயது ஆண், வெங்கடேசபுரத்தை சேர்ந்த 68 வயது ஆண், 60 வயது பெண், ஓலக்காட்டை சேர்ந்த 55 வயது ஆண், பல்லடம் செட்டிபாளையம் ரோட்டை சேர்ந்த 36 வயது ஆண், உடுமலை நேரு நகரை சேர்ந்த 66 வயது ஆண், உடுமலை திரு.வி.க.நகரை சேர்ந்த 42 வயது ஆண், உடுமலை கே.பி. கோவில் தெருவை சேர்ந்த 14 வயது சிறுவன், 43 வயது பெண், திருப்பூரை சேர்ந்த 19 வயது நர்சிங் மாணவி, ஏ.வி.பி. லே அவுட்டை சேர்ந்த 27 வயது பெண், 36 வயது பெண், 13 வயது சிறுவன்.
நெசவாளர் காலனியை சேர்ந்த 75 வயது ஆண், ராக்கியாபாளையம் ஜெய்நகரை சேர்ந்த 36 வயது ஆண், கடைவீதி புதுப்பையை சேர்ந்த 32 வயது ஆண், 24 வயது ஆண், 24 வயது ஆண், மடத்துக்குளம் கழுகரையை சேர்ந்த 16 வயது சிறுமி, அவினாசி கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்த 42 வயது பெண், 37 வயது ஆண், 7 வயது சிறுவன், முருகம்பாளையத்தை சேர்ந்த 21 வயது பெண், 48 வயது பெண், வளையங்காடு சாய்பாபா நகரை சேர்ந்த திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளரான 55 வயது ஆண், பூலுவப்பட்டி பிரிவை சேர்ந்த 45 வயது ஆண், கொங்கு மெயின்ரோட்டை சேர்ந்த 30 வயது பெண், பொல்லிகாளிபாளையத்தை சேர்ந்த 55 வயது பெண் என 34 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக கோவை மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 541 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story