தஞ்சை மாவட்டத்தில், 3-வது முறையாக கொரோனா பாதிப்பு 100-ஐ தாண்டியது - வங்கி, டாஸ்மாக், ஜவுளி, நகைக்கடை ஊழியர்களுக்கும் தொற்று உறுதி
தஞ்சை மாவட்டத்தில் 3-வது முறையாக ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 100-ஐ தாண்டி உள்ளது. வங்கி, டாஸ்மாக், ஜவுளி, நகைக்கடை ஊழியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் மார்க்கெட் தொடர்புடையவர்கள் மூலம் இந்த தொற்று அதிகரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று தஞ்சை மாவட்டத்தில் மேலும் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் நாட்டு மருந்துக்கடை ஊழியர், டாஸ்மாக் கடை ஊழியர்கள் 4 பேர், ஜவுளிக்கடை ஊழியர், சலூன்கடை ஊழியர், வங்கி ஊழியர், கல்லூரி மாணவர், மார்க்கெட் வியாபாரிகள், லோடுமேன்கள் ஆகியோரும் அடங்குவர். 106 பேரில் கும்பகோணத்தை சேர்ந்த 63 பேரும், தஞ்சையை சேர்ந்த 13 பேரும், பட்டுக்கோட்டையை சேர்ந்த 14 பேரும், பாபநாசத்தை சேர்ந்த 6 பேரும், திருவிடைமருதூரை சேர்ந்த 4 பேரும் அடங்குவர். இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,422 ஆக அதிகரித்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக கடந்த 17-ந் தேதி 117 பேரும், 18-ந் தேதி 181 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதன் பின்னர் 71, 83, 34 என பாதிப்பு எண்ணிக்கை இருந்தது. நேற்று 3-வது முறையாக கொரோனா பாதிப்பு 100-ஐ தாண்டி உள்ளது. கொரோனாவால்பாதிக்கப் பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் வல்லத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 53 பேர் நேற்று குணம் அடைந்து வீடு திரும்பினர். தற்போது 764 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story