தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 100 படுக்கைகள் அமைக்கும் பணி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 100 படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மேல சண்முகபுரத்தில் ‘கொரோனா இல்லா தூத்துக்குடி‘ அமைப்பின் மூலம் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கபசுர குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு முககவசம், கையுறை ஆகியவற்றை வழங்கினார்.
தொடர்ந்து அவர், பூபாலராயர்புரம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளையும், காய்ச்சல் சிறப்பு முகாமில் சளி மாதிரிகள் சேகரிக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர், நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள அனைவருக்கும் ‘தெர்மல் ஸ்கிரினிங்’ மற்றும் ‘பல்சஸ்’ பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், கொரோனா தடுப்பு பணிகளை நோய் கட்டுபாட்டு பகுதியில் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள அனைவருக்கும் கபசுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்க அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, மாநகராட்சி நகர் நல அலுவலர் அருண்குமார், சுகாதார அலுவலர்கள் ஸ்டாலின், ராஜசேகர், அரி கணேஷ், இம்மானுவேல் டயாஸ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 50 ஆயிரத்து 726 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 4 ஆயிரத்து 356 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஒரு பகுதியில் சளி, காய்ச்சல் உள்ள நபர்கள் அதிகளவு கண்டறியப்பட்டால், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதில் 2 அல்லது 3 நபர்களுக்கு மேல் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால், உடனடியாக அந்த பகுதி நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்குள்ள அனைவருக்கும் ‘தெர்மல் ஸ்கிரினிங்’, ‘பல்சஸ்’ பரிசோதனை மற்றும் வீடு வீடாக கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது.
தூத்துக்குடி மாநகராட்சியில் 15 இடங்களில் நோய் கட்டுபாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அந்த பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகள் மாநகராட்சி மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேல சண்முகபுரம் மற்றும் வன்னியாச்சி தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் வீடுகள் உள்ளன. இந்த பகுதிகளில் அதிகமான நபர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளதாக தகவல் கிடைக்கப்பட்டது.
அதனடிப்படையில் 100 மாதிரிகள் சேகரித்து பரிசோதனைகள் செய்ததில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் இப்பகுதியில் எந்த ஒரு தளர்வும் இல்லாமல், நோய் தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளதால் படிப்படியாக தொற்றின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி நோய் கட்டுபாட்டு பகுதியில் போலீசார் மூலம் தேவையான பாதுகாப்புகளும், தடுப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் காய்ச்சல் சிறப்பு முகாம் அந்த பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுர குடிநீர், விட்டமின் மற்றும் சிங் மருந்துகள் வழங்கும் பணிகளும் நடந்து வருகிறது.
மேலும் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமம் என 8 தெருக்களும், காயல்பட்டணம் நகராட்சி 7 தெருக்களும் நோய் கட்டுபாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதிகளிலும் உள்ள பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், விட்டமின் மற்றும் சிங் மருந்துகள் வழங்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களை உடனடியாக தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருவதாலும், அவர்களுடன் தொடர்பில் உள்ள நபர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருவதாலும், இந்த நோய் பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது.
தற்போது 70 சதவீதம் நபர்கள், கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களின் தொடர்புடையவர்களாக உள்ளார்கள். 15 முதல் 20 சதவீதம் நபர்கள் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் கொண்ட நபர்கள் ஆவர். கடந்த 2, 3 தினங்களாக சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ள நபர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் சுமார் 1,500 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 600 படுக்கைகள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளது. இங்கு மேலும் கூடுதலாக 100 படுக்கைகள் ஆக்சிஜன் பைப்லைன் வசதியுடன் அமைத்திட, பொதுப்பணித்துறை அலுவலர்கள் மூலமாக பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 3 அல்லது 4 நாட்களுக்குள் இதற்கான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் வெளியே செல்லாமல் கண்காணிக்க கூடுதலாக காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அரசு ஆஸ்பத்திரிக்கு உள்ளே செல்லும்போதும், ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வரும்போதும் 100 சதவீதம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களின் தொடர்பாளர்களுக்கும் உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு வருவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக பரவல் ஏற்படவில்லை.
பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வரும்போது முககவசங்கள் கட்டாயமாக அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். தொற்று நோய் பரவாமல் இருக்க பொதுமக்கள் கையில்தான் உள்ளது. மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் 100 சதவீதம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம், சண்முகபுரம் பகுதி மக்கள் தங்களது பகுதிக்கு செல்லும் பாதைகளை அடைக்க கூடாது என்று வலியுறுத்தினர்.

Related Tags :
Next Story