தொற்று பாதித்த 19-வது எம்.எல்.ஏ.: தூத்துக்குடி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கீதாஜீவனுக்கு கொரோனா பாதிப்பு - மகள், மருமகனுக்கும் தொற்று உறுதி

தூத்துக்குடி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கீதாஜீவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவருடைய மகள், மருமகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் மின்னல் வேகத்தில் அதிகரித்தவாறு உள்ளது. தென் மாவட்டங்களிலும் பல ஆயிரக்கணக்கானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் அதிகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் அந்த கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்), ஆர்.டி.அரசு (செய்யூர்), செஞ்சி மஸ்தான் (செஞ்சி), கணேசன் (திட்டக்குடி), செங்குட்டுவன் (கிருஷ்ணகிரி), காந்தி (ராணிப்பேட்டை), கார்த்திகேயன் (வேலூர்), தங்கபாண்டியன் (ராஜபாளையம்) ஆகியோரும், அ.தி.மு. க.வைச் சேர்ந்த பழனி (ஸ்ரீபெரும்புதூர்), குமரகுரு (உளுந்தூர்பேட்டை), சதன் பிரபாகர் (பரமக்குடி), அம்மன் கே.அர்ஜூனன் (கோவை தெற்கு) ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கீதாஜீவனுக்கு (வயது 50) நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கீதாஜீவன் எம்.எல்.ஏ.வின் மகளுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கீதாஜீவன் எம்.எல்.ஏ. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் கீதாஜீவன் எம்.எல்.ஏ, அவரது மகள், மருமகன் ஆகிய 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கீதாஜீவன் எம்.எல்.ஏ. உள்பட 3 பேரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடந்த 22-ந் தேதி மின்கட்டண உயர்வுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கட்சியினருடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கோவிந்தராசு (71) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. கோவிந்தராசு எம்.எல்.ஏ. கடந்த சில நாட்களாக தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார். மேலும் விபத்தில் காயம் அடைந்து தஞ்சை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரை நேரில் சென்று பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதன் பின்னர் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து கோவிந்தராசுக்கு பேராவூரணி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவருடைய உதவியாளராக இருந்த கொன்றைக்காட்டை சேர்ந்த 30 வயதானவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் எம்.எல்.ஏ.வின் அலுவலக பணிகளை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு இவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து நேற்று அதிகாலை ஆம்புலன்ஸ் மூலம் 2 பேரும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் நேற்று அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவிந்தராசு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரது வீடு இருந்த தெரு மற்றும் வீட்டை சுற்றிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் எம்.எல்.ஏ.வின் மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட உறவினர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

Related Tags :
Next Story