களியக்காவிளையில், சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா; போலீஸ் நிலையம் மூடப்பட்டது
களியக்காவிளையில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் போலீஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
களியக்காவிளை,
களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் சிதறால் பகுதியை சேர்ந்த 55 வயதுடைய ஒருவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்தது. இதையடுத்து சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து களியக்காவிளை போலீஸ் நிலையம் தற்்காலிகமாக மூடப்பட்டது. தற்போது அந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருடன் பணியாற்றிய சக போலீசாரிடம் இருந்து சளி, மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
தக்கலை பஸ் நிலையம் பகுதியை சேர்ந்த 74 வயது தொழிலதிபர் ஒருவருக்கு கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொண்ட போது நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தொழிலதிபரின் 2 மகன்கள், மருமகள்கள் உள்பட 8 பேரிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
தக்கலை வெட்டிகோணம் பகுதியை சேர்ந்த 29 வயது வாலிபர் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் பெர்பெற்றி டெரன்ஸ் லியோன் உத்தரவின் பேரில் சுகாதார பணியாளர்கள் கிருமி நாசினி தெளிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story