704 கிராம் தங்க கட்டி மோசடி; தொழிலாளி கைது


704 கிராம் தங்க கட்டி மோசடி; தொழிலாளி கைது
x
தினத்தந்தி 26 July 2020 3:30 AM IST (Updated: 26 July 2020 8:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் நகைபட்டறை உரிமையாளரிடம் 704 கிராம் தங்க கட்டிமோசடி செய்த நகை தொழிலாளி கைது செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை,

கோவை வைசியாள் வீதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 43). நகை பட்டறை உரிமையாளர். இவர் செல்வபுரம் ஹவுசிங் யூனிட், எல்.ஜி. தோட்டம் பகுதியை சேர்ந்த நகை தொழிலாளி தண்டபாணி (43) என்பவரிடம் 704 கிராம் தங்க கட்டியை கொடுத்து ஆபரணமாக வடிவமைத்து தருமாறு கேட்டுக் கொண்டார்.

கடந்த 5 மாதம் ஆகியும் அவர் ஆபரணம் செய்து கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அருண்குமார் தங்க கட்டியை திருப்பி தருமாறு கேட்டார். பலமுறை கேட்டும் அவர் தங்க கட்டியை திரும்ப கொடுக்கவில்லை.

இது குறித்து அருண்குமார் பெரியகடை வீதி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 704 கிராம் தங்க கட்டியை மோசடி செய்த நகை தொழிலாளியான தண்டபாணியை கைது செய்தனர்.

இதேபோல் கோவை சுக்கிரவார்பேட்டையை சேர்ந்தவர் ரிஷப்குமார் (28). இவர் வைசியாள் வீதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார். ராமநாதபுரத்தை சேர்ந்த செல்வம் (25) என்பவர் 176 கிராம் தங்க கட்டியை ஆபரணமாக செய்து தருவதாக வாங்கிச்சென்றவர் நகை செய்து கொடுக்கவில்லை. இந்த மோசடி குறித்து ரிஷப்குமார் பெரியகடை வீதி போலீசில் புகார் செய்தார். இதுகுறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. கோவையில் மோசடி செய்யப்பட்ட தங்க கட்டியின் மதிப்பு ரூ.39 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

Next Story