வேலூரில் 3 இடங்களில் கொரோனா பரிசோதனை முகாம் 298 வியாபாரிகளின் சளிமாதிரி சேகரிப்பு


வேலூரில் 3 இடங்களில் கொரோனா பரிசோதனை முகாம் 298 வியாபாரிகளின் சளிமாதிரி சேகரிப்பு
x
தினத்தந்தி 26 July 2020 10:28 PM IST (Updated: 26 July 2020 10:28 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் 3 இடங்களில் கொரோனா பரிசோதனை முகாம் 298 வியாபாரிகளின் சளிமாதிரி சேகரிப்பு.

வேலூர்,

வேலூர் மாநகராட்சியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதில் ஒரு பகுதியாக வார்டு தோறும் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காய்கறி, மளிகைக்கடை வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.

அதன்பேரில் வேலூர் மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட காய்கறி, மளிகைக்கடை வியாபாரிகளுக்காக தொரப்பாடியில் 2 இடங்களிலும், வெங்கடேஸ்வரா பள்ளி வளாகத்திலும் பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. தொரப்பாடி அரசு பள்ளியில் இயங்கி வரும் தற்காலிக மார்க்கெட்டில் கடை வைத்துள்ள 127 வியாபாரிகள் மற்றும் அந்த பகுதியில் மளிகை உள்ளிட்ட பல்வேறு கடைகள் நடத்தி வரும் 88 வியாபாரிகளுக்கு முகாமில் சளிமாதிரி சேகரிக்கப்பட்டன.

அதேபோன்று வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்தில் காய்கறி, பழக்கடைகள் வைத்துள்ள 83 பேருக்கு வெங்கடேஸ்வரா பள்ளியில் நடந்த முகாமில் சளிமாதிரி எடுக்கப்பட்டன. முகாம்களில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், நர்சுகள் பங்கேற்று சளிமாதிரியை சேகரித்தனர்.

இந்த முகாம்களை மாநகராட்சி கமிஷனர் சங்கரன் ஆய்வு செய்தார். ஆய்வின்போது 4-வது மண்டல உதவி கமிஷனர் பிரபுகுமார் ஜோசப், சுகாதார அலுவலர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story