பேய் விரட்டுவதாக கூறி தாய், மகனை அடித்து கொன்ற மந்திரவாதி உள்பட 4 பேர் கைது


பேய் விரட்டுவதாக கூறி தாய், மகனை அடித்து கொன்ற மந்திரவாதி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 27 July 2020 2:06 AM IST (Updated: 27 July 2020 2:06 AM IST)
t-max-icont-min-icon

பேய் விரட்டுவதாக தாய், மகனை அடித்து கொலை செய்த மந்திரவாதி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

தானே மாவட்டம் கல்யாண் பகுதியை சேர்ந்தவர் பண்டாரிநாத்(வயது50). சம்பவத்தன்று இவரது குடும்பத்தினர் பண்டாரிநாத் மற்றும் அவரது 80 வயது தாயை கல்யாண் புறநகர் அடாடே கிராமத்தில் உள்ள சுரேந்திர பாட்டீல்(வயது35) என்ற மந்திரவாதியிடம் அழைத்து சென்று உள்ளனர்.

அங்கு மந்திரவாதி ேபய் விரட்டுவதாக கூறி பண்டாரிநாத் மற்றும் அவரது தாயை சரமாரியாக அடித்து உள்ளார். இதை அவர்களது குடும்பத்தினர் வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மந்திரவாதி அடித்ததில் தாய், மகன் 2 பேரும் சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

4 பேர் கைது

தகவல் அறிந்து சென்ற போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து பேய் விரட்டுவதாக கூறி தாய், மகனை அடித்து கொலை செய்த மந்திரவாதி சுரேந்திர பாட்டீல், உடந்தையாக இருந்த பண்டாரிநாத் குடும்பத்தினர் கவிதா (27), விலாஸ் (22) மற்றும் 17 வயது வாலிபரை கைது செய்தனர்.

முழுமையான விசாரணைக்கு பிறகே தாய், மகன் கொலைக்கான உண்மையான தகவல்கள் தெரியவரும் என துணை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சாரே கூறினார்.

Next Story