ரூ.52 கோடி செலவில் உருவாகும் ஹேன்காக் மேம்பாலம் ராட்சத இரும்பு சட்டம் பொருத்தப்பட்டது

ரூ.52 கோடி செலவில் உருவாகும் ஹேன்காக் மேம்பாலத்தில் ராட்சத இரும்பு சட்டம் பொருத்தும் பணி முடிவடைந்து உள்ளது.
மும்பை,
மும்பை மத்திய ரெயில்வே வழித்தடத்தில் சாண்ட்ஹர்ஸ்ட் ரோடு ரெயில் நிலையத்தை யொட்டி ஹேன்காக் என்ற மேம்பாலம் இருந்தது. இந்த பாலம் சேதமடைந்ததால் கடந்த 2015-ம் ஆண்டு மாநகராட்சி சார்பில் இடித்து அகற்றப்பட்டது. இதற்கு பதிலாக புதிய மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த புதிய பாலம் 65 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த மேம்பாலத்திற்காக, ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே ராட்சத இரும்பு சட்டம் பொருத்தும்பணி நடைபெற்றது. இதன் காரணமாக சி.எஸ்.எம்.டி.யில் இருந்து குர்லா வரையிலான ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
ரூ.52 கோடி செலவு
பாலம் பணி முடிவடைய உள்ள நிலையில், அதன் உறுதி தன்மை சரிபார்க்கப்பட உள்ளது. இதையடுத்து வருகிற செப்டம்பரில் போக்குவரத்திற்காக பாலம் திறக்கப்பட உள்ளது. இந்த பாலம் ரூ.52 ேகாடி செலவில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story