ராமர் கோவில் பூமி பூஜையை காணொலி காட்சி மூலம் நடத்தலாம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே யோசனை
அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜையை காணொலி காட்சி வாயிலாக நடத்தலாம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே யோசனை தெரிவித்து உள்ளார்.
மும்பை,
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை வருகிற 5-ந்தேதி நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விழாவில் கலந்துகொள்ள மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி வரும் நிலையில், ராமர் கோவில் பூமி பூஜையை காணொலி காட்சி மூலம் நடத்தலாம் என சிவசேனா தலைவரும், மராட்டிய முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே யோசனை தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ராம பக்தர்கள் ஆர்வம்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது என்பது பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு நிறைவேறுகிறது. இது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வு. எனவே இந்த பெருமைமிகு பூமி பூஜையில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான ராம பக்தர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய கடந்த மார்ச் மாதம் அயோத்திக்கு சென்ற போது, சரயு ஆற்றங்கரையில் பெரும் கூட்டத்தை கண்டேன். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சரயு நதிக்கரையில் மகா ஆரத்தி பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. ராமர் கோவில் நம்பிக்கைக்குரிய விஷயம். அங்கு மக்கள் வருவதை எவ்வாறு தடுக்க முடியும். அங்கு கொரோனா வைரஸ் பரவுவதை நாம் அனுமதிக்கலாமா? எனவே ராமர் கோவில் பூமி பூஜையை அனைவரும் காணும் வகையில் காணொலி காட்சி மூலம் நடத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story