வீரதீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை மாவட்டத்தில் வீரதீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் அறிவித்துள்ளார்.
சிவகங்கை,
தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டு ஏதாவது ஒரு துறையில் வீர தீர மற்றும் துணிச்சலான சாதனை புரிந்த பெண்களுக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் கல்பனா சாவ்லா விருதை சுதந்திர தின விழாவின்போது வழங்கி வருகிறது. இந்த ஆண்டும் இந்த விருது பெற தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.
இந்த விருதுக்கு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த விருதிற்கான விண்ணப்பத்தை சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 31-ந் தேதி மாலை 5 மணிக்குள் கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story