கும்மிடிப்பூண்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 25 பேர் கைது
கும்மிடிப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி,
மத்திய அரசின் அவசர சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கும்மிடிப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அருள் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ஜீவா, விவசாய சங்க ஒன்றியதலைவர் செங்கல்வராயன், நிர்வாகிகள் ரவிக்குமார், ராஜேஷ், ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை கும்மிடிப்பூண்டி போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story