அப்துல்கலாம் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி


அப்துல்கலாம் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி
x
தினத்தந்தி 28 July 2020 8:45 AM IST (Updated: 28 July 2020 8:45 AM IST)
t-max-icont-min-icon

அப்துல்கலாமின் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

ராமேசுவரம்,

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அப்துல்கலாம் படித்த தொடக்கப்பள்ளியில் அவரது உருவப்படத்துக்கு தலைமை ஆசிரியை ராஜலட்சுமி, கல்விக்குழு தலைவர் பாலா, நாகராஜ், என்ஜினீயர் முருகன், கலாமின் நண்பர் விஜயராகவன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஆண்டுதோறும் அப்துல்கலாமின் நினைவிடத்தில் மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டு இருந்ததால் யாரும் வரவில்லை.

அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர், முன்னாள் எம்.பி. அன்வர்ராஜா ஆகியோர் தலைமையில் ராமேசுவரம் நகர் செயலாளர் அர்ச்சுனன், அவை தலைவர் குணசேகரன், நகர் பொருளாளர் தர்மர், முன்னாள் நகரசபை தலைவர் அர்ச்சுனன், மாவட்ட விவசாய அணி செயலாளர் வீரபத்திரன், நகர் இளைஞரணி செயலாளர் மகேந்திரன், நகர் துணை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் அப்துல்கலாமின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையிலும், அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த், கழக அமைப்பு செயலாளர் ஜி.முனியசாமி ஆகியோர் தலைமையிலும், நாம் தமிழர் கட்சி சார்பில் கண்.இளங்கோ உள்பட அக்கட்சி நிர்வாகிகள் அப்துல் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

Next Story