மாவட்ட செய்திகள்

பழம்பெரும் இந்தி நடிகை கும்கும் மரணம் + "||" + Legendary Hindi actress Kumkum dies

பழம்பெரும் இந்தி நடிகை கும்கும் மரணம்

பழம்பெரும் இந்தி நடிகை கும்கும் மரணம்
பழம்பெரும் இந்தி நடிகை கும்கும் மரணமடைந்தார்.
மும்பை,

பழம்பெரும் இந்தி நடிகையான கும்கும் மும்பை பாந்திரா பகுதியில் வசித்து வந்தார். முதுமை காரணமாக நோயால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று காலை 11.30 மணியளவில் வீட்டில் உயிரிழந்தார். நடிகை கும்குமின் வயது 86.


சாய்புநிஷா என்ற இயற்பெயரை கொண்ட கும்கும் பீகார் மாநிலம் சேக்புரா மாவட்டத்தில் உள்ள ஹூசைனாபாத் ஊரை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 1954-ம் ஆண்டு இந்தி சினிமாவில் அறிமுகம் ஆனார். சி.ஐ.டி., மிஸ்டர் எக்ஸ் இன் பாம்பே, மதர் இந்தியா, உஜாலா, தில் பி தேரா ஹூம் பி தேரே, நாயா தவுர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார்.

இரங்கல்

நடிகை கும்கும் பிரபல நடிகையாக இருந்த போதும் கூட நல்ல கதாபாத்திரங்களில் துணை வேடங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் நடிகர் தர்மேந்திராவுக்கு சகோதரியாகவும் நடித்து உள்ளார். அதே நேரத்தில் 2 படங்களில் அவருக்கு ஜோடியாகவும் நடித்து இருக்கிறார்.

சுமார் 115 படங்களில் நடித்த நடிகை கும்கும் சாஜித் அக்பர் கானை திருமணம் செய்த பிறகு சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.

மறைந்த நடிகை கும்கும்மின் இறுதி சடங்கு மஜ்காவ் தகன மையத்தில் நேற்று நடந்தது. பழம்பெரும் நடிகையின் மறைவுக்கு பாடகி லதா மங்கேஷ்கர், நடிகர் ஜாவித் ஜாப்ரி உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ரிஷிவந்தியம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சிவராஜ் மரணம்
ரிஷிவந்தியம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சிவராஜ் மரணமடைந்தார்.
2. சிறுநீரக கோளாறினால் பிரபல இந்தி பின்னணி பாடகி அனுராதா பட்வலின் மகன் மரணம்
சிறுநீரக கோளாறினால் பிரபல இந்தி பின்னணி பாடகி அனுராதா பட்வலின் மகன் மரணம் அடைந்தார்.
3. நடிகை சஞ்சனா, டாக்டரை திருமணம் செய்தாரா? சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படத்தால் பரபரப்பு
போதை பொருள் விவகாரத்தில் கைதான நடிகை சஞ்சனா கல்ராணி, டாக்டரை திருமணம் செய்ததாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4. உத்தவ் தாக்கரேயை தரக்குறைவாக பேசியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது போலீசில் புகார்
உத்தவ் தாக்கரேயை தரக்குறைவாக பேசியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
5. போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்: நடிகை சஞ்சனா கல்ராணி அதிரடி கைது
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகை சஞ்சனா கல்ராணி நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி செல்போன்கள், மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...