மணல் கடத்திய லாரியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த கிராம மக்கள்


மணல் கடத்திய லாரியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 29 July 2020 6:35 AM GMT (Updated: 29 July 2020 6:35 AM GMT)

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே மணல் கடத்திய லாரியை பிடித்து கிராம மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தா.பழூர், 

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி பகுதியில் இரவு நேரத்தில் லாரிகள் போக்குவரத்து இருந்து வந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு நேரத்தில் லாரிகள் போக்குவரத்து குறித்து கிராம மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு காரைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சிலர் ஒன்று சேர்ந்து காரைக்குறிச்சி கிராமத்தை கடக்கும் லாரிகளை நிறுத்தி விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது கடுமையாக மழை பெய்து கொண்டிருந்தது. கடும் மழையையும் பொருட்படுத்தாமல் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது நள்ளிரவு 3 மணி அளவில் அரசு அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் தா.பழூர் போலீசாருக்கு உடனே தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தா.பழூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், காரைக்குறிச்சி கல்லாமலம் தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மகன் கணேசன் (என்கிற) பஞ்சநாதன்(வயது 50) என்பவருக்கு சொந்தமான லாரியில் பஞ்சநாதன் மகன் செல்லதுரை மணல் ஏற்றி வந்துள்ளார். இதில் டிரைவர் லாரியை பிடித்த உடன் தப்பியோடிய நிலையில் லாரியை போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிந்து தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story