மாவட்ட செய்திகள்

தனது குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் நன்றி + "||" + Actress Aishwarya Rai thanks fans for praying for her family

தனது குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் நன்றி

தனது குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் நன்றி
தனது குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் நன்றி.
மும்பை,

இந்தி திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் அமிதாப்பச்சன், அவரது மகனும், நடிகருமான அபிஷேக் பச்சன், மருமகளும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பை நானாவதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பின் நடிகை ஐஸ்வர்யா ராயும், அவரது மகள் ஆராத்யாவும் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். இதையடுத்து அவர்கள் நேற்றுமுன்தினம் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர். நடிகர் அமிதாப்பச்சனும், அபிஷேக் பச்சனும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


இந்தநிலையில், தனது குடும்பம் கொரோனாவில் இருந்து மீண்டு வருவதற்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் அன்பான தேவதை ஆராத்யா, பா(அமிதாப்பச்சன்), அப்(அபிஷேக் பச்சன்) மற்றும் எனக்காக செய்த உங்களின் பிரார்த்தனை, அக்கறை மற்றும் வாழ்த்துகளுக்காக மிக்க நன்றி. என்றென்றும் இதற்காக கடன்பட்டு இருக்கிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். என் அன்பு எப்போதும் உங்களிடம் இருக்கும். உங்கள் அனைவரின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். நலமுடன் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தி.மு.க. பொது செயலாளர் மறைவு; இரங்கல் தெரிவித்த முதல்வருக்கு மு.க. ஸ்டாலின் நன்றி
தி.மு.க. பொது செயலாளர் அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல் அமைச்சருக்கு மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்து கொண்டார்.