மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 92 பேர் சாவு மொத்த பலி எண்ணிக்கை 2,147 ஆக உயர்ந்தது + "||" + The total death toll from corona to 92 in Karnataka rose to 2,147 in a single day

கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 92 பேர் சாவு மொத்த பலி எண்ணிக்கை 2,147 ஆக உயர்ந்தது

கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 92 பேர் சாவு மொத்த பலி எண்ணிக்கை 2,147 ஆக உயர்ந்தது
கர்நாடகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தினசரி பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் மேல் நீடித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 92 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனார். இதுவரை மாநிலத்தில் கொரோனா தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,147 ஆக உயர்ந்து உள்ளது.
பெங்களூரு,

நாட்டில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 15 லட்சத்தை தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது. தேசிய அளவில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கி பதிவாகி வருகிறது. அதேபோல் கர்நாடகத்திலும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை.


மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆயினும் கொரோனா அதிகரித்து தான் வருகிறது. கர்நாடகத்தில் தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. கடந்த ஒரு வாரமாக அதாவது நேற்று 7-வது நாளாக கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்திற்கும் மேல் நீடித்தது.

ஒரே நாளில் 92 பேர் பலி

கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 5,503 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 12 ஆயிரத்து 504 அதிகரித்துள்ளது. அதே போல் ஒரே நாளில் கொரோனாவுக்கு 92 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா தாக்கி உயரிழந்தோரின் எண்ணிக்கை 2,147 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகத்தில் நேற்றைய பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 5 ஆயிரத்து 1 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 5,503 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்து 504 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 92 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,147 ஆக அதிகரித்துள்ளது.

பெங்களூருவில் 2,270 பேர்

புதிதாக கொரோனா பாதித்தோரில் பெங்களூரு நகரில் 2,270 பேர், பல்லாரியில் 338 பேர், பெலகாவியில் 279 பேர், தாவணகெரேயில் 225 பேர், தட்சிண கன்னடாவில் 208 பேர், மைசூருவில் 200 பேர், தார்வாரில் 175 பேர், உடுப்பியில் 173 பேர், கலபுரகியில் 168 பேர், சிவமொக்காவில் 131 பேர், துமகூருவில் 128 பேர், யாதகிரியில் 114 பேர், சிக்பள்ளாப்பூரில் 96 பேர், ஹாசனில் 95 பேர், பீதரில் 91 பேர், விஜயாப்புராவில் 90 பேர், கொப்பலில் 84 பேர், உத்தரகன்னடாவில் 75 பேர், ராய்ச்சூரில் 73 பேர், மண்டியாவில் 70 பேர், கதக்கில் 61 பேர், பாகல்கோட்டையில் 57 பேர், ராமநகரில் 56 பேர், சித்ரதுர்காவில் 52 பேர், ஹாவேரியில் 50 பேர், பெங்களூரு புறநகரில் 49 பேர், கோலாரில் 34 பேர், சிக்கமகளூருவில் 33 பேர், சாம்ராஜ்நகரில் 20 பேர், குடகில் 8 பேர் உள்ளனர்.

கொரோனாவுக்கு பெங்களூருவில் 30 பேர், கலபுரகியில் 10 பேர், தட்சிண கன்னடா, தார்வாரில் தலா 7 பேர், மைசூருவில் 5 பேர், தாவணகெரே, உடுப்பி, ஹாசனில் தலா 4 பேர், பெலகாவி, துமகூரு, கதக்கில் தலா 3 பேர், பல்லாரி, உத்தரகன்னடா, ராய்ச்சூர், பாகல்கோட்டையில் தலா 2 பேர், சிக்பள்ளாப்பூர், பீதர், விஜயாப்புரா, கொப்பலில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனை

கர்நாடகத்தில் இதுவரை 42 ஆயிரத்து 903 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 2,397 பேர் அடங்குவர். 67 ஆயிரத்து 448 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 639 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 12 லட்சத்து 75 ஆயிரத்து 761 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 32 ஆயிரத்து 990 மாதிரிகள் அடங்கும்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வேலூர், திருவண்ணாமலையில் த.மா.கா. பிரமுகர் உள்பட 10 பேர் கொரோனாவுக்கு பலி
வேலூர், திருவண்ணாமலையில் த.மா.கா. பிரமுகர் உள்பட 10 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
2. தென்காசி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் என்ஜினீயரிங் மாணவர் மின்சாரம் தாக்கி சாவு
தென்காசி அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. சாலையின் குறுக்கே மாடு வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த ஊழியர் சாவு
திருவள்ளூர் அருகே சாலையின் குறுக்கே மாடு வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர், மனைவி கண்எதிரே பரிதாபமாக இறந்தார்.
4. ஆந்திராவில் கிருமிநாசினி திரவம் குடித்து 13 பேர் பரிதாப சாவு
ஆந்திராவில் போதைக்காக கிருமிநாசினி திரவம் குடித்த 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
5. ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 9 பேர் கொரோனாவுக்கு பலி
ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 9 பேர் கொரோனாவுக்கு பரிதாபமாக உயிரிழந்தனர்.