மாவட்ட செய்திகள்

வண்டலூர் பூங்காவில் 6 விலங்கு காப்பாளர்களுக்கு நினைவு பரிசு சர்வதேச புலிகள் தினத்தையொட்டி வழங்கப்பட்டது + "||" + Commemorative gifts were given to 6 animal keepers at Vandalur Park on the occasion of International Tiger Day

வண்டலூர் பூங்காவில் 6 விலங்கு காப்பாளர்களுக்கு நினைவு பரிசு சர்வதேச புலிகள் தினத்தையொட்டி வழங்கப்பட்டது

வண்டலூர் பூங்காவில் 6 விலங்கு காப்பாளர்களுக்கு நினைவு பரிசு சர்வதேச புலிகள் தினத்தையொட்டி வழங்கப்பட்டது
வண்டலூர் பூங்காவில் 6 விலங்கு காப்பாளர்களுக்கு நினைவு பரிசு சர்வதேச புலிகள் தினத்தையொட்டி வழங்கப்பட்டது.
வண்டலூர்,

சர்வதேச புலிகள் தினத்தையொட்டி வண்டலூர் பூங்காவில் புலிகளை நல்ல முறையில் பராமரித்து வரும் விலங்கு காப்பாளர்களை கவுரவிக்கும் பொருட்டு 6 விலங்கு காப்பாளர்களுக்கு நினைவு பரிசுகளை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனஉயிரின காப்பாளர் யுவராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில் பூங்கா இயக்குனர் யோகேஷ் சிங், துணை இயக்குனர் சுதா, பூங்கா அலுவலர்கள் உடனிருந்தனர். சர்வதேச புலிகள் தினத்தையொட்டி பூங்காவில் நேற்று ஓவிய போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகளை (மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்காக) வலைதளம் மூலமாக நடத்தப்பட்டன.


சர்வதேச புலிகள் தினத்தையொட்டி வண்டலூர் பூங்காவின் Youtu-be சேனலில் மாலை 3½ மணி முதல் 5 மணி வரை வனஉயிரி வல்லுனர்களின் புலிகளுடனான நேரடி அனுபவங்கள் மற்றும் புலிகள் பற்றிய அரிய தகவல்களை பற்றி நேரலையாக விளக்கினர். தற்போது பூங்காவில் 31 புலிகள் உள்ளன. அவற்றில் வெள்ளைப்புலிகள் 13 மற்றும் வங்கபுலிகள் 18 ஆகும்.

இந்த தகவலை பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 2-வது நினைவு தினம்: கருணாநிதி உருவப்படத்துக்கு தி.மு.க.வினர் மரியாதை
கருணாநிதியின் 2-வது நினைவு தினத்தையொட்டி நேற்று அவரது படத்துக்கு, தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.