கம்பத்தில் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கம்பம்,
கம்பம் 29-வது வார்டு விவேகானந்தர் தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தனியார் இடத்தின் வழியாக சென்றது. தற்போது அந்த இடத்தின் உரிமையாளர் கழிவுநீர் செல்ல வழிவிடாமல் அடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கழிவுநீர் தெருவில் தேங்கியிருந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் கழிவு நீர் செல்வதற்கு வழிவகை செய்ய நகராட்சி கமிஷனரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story