மாவட்ட செய்திகள்

6-ம் கட்ட அகழாய்வு: மழையால் கீழடியில் பணிகள் பாதிப்பு + "||" + 6-phase Excavating: Functions affected by rain in keezhadi

6-ம் கட்ட அகழாய்வு: மழையால் கீழடியில் பணிகள் பாதிப்பு

6-ம் கட்ட அகழாய்வு: மழையால் கீழடியில் பணிகள் பாதிப்பு
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்த 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம்,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை பெய்த மழையால் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 பகுதிகளிலும் பணிகள் பாதிக்கப்பட்டன.

இதையடுத்து மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைத்து பகுதியிலும் உள்ள குழிகளில் தார்பாய்கள் போட்டு மூடி வைத்தனர். இதையடுத்து நேற்று அனைத்து பகுதிகளிலும் பணிகள் நடைபெறவில்லை. மழைநீர் அகற்றப்பட்டு அதன்பின்னர் பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.