மோகனூர் ஒன்றிய பகுதிகளில் ரூ.95 லட்சம் மதிப்பில் புதிய சாலைகள் அமைக்க பூமிபூஜை கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
மோகனூர் ஒன்றிய பகுதிகளில் ரூ.95 லட்சம் மதிப்பில் புதிய சாலைகள் அமைக்க பூமிபூஜை நடைபெற்றது,
மோகனூர்,
மோகனூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சின்னப்பெத்தாம்பட்டி ஊராட்சி மூங்கில்பட்டியில் புதிய தார்சாலை அமைக்க ஊரக வளர்ச்சி சாலை மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.26 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டதை தொடர்ந்தும், ஆரியூர் ஊராட்சி புதுமாப்பனூர் பகுதிகளில் தார்சாலை அமைக்க நபார்டு திட்டம் மூலம் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதே போல் அரசநத்தம் ஊராட்சியில் ரூ.39 லட்சம் மதிப்பில் 4 சாலை அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டு இதற்கான பூமிபூஜை நடைபெற்றது,
நாமக்கல் கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். ஒன்றியக்குழு தலைவர் சரஸ்வதி கருமண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ருத்ராதேவி சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வசித்தனர். இதில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், மோகனூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கருமண்ணன், நிலவள வங்கி தலைவர் குணசேகரன், ஆரியூர் கூட்டுறவு வங்கித்தலைவர் மணி, அரசநத்தம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், ஒப்பந்ததாரர் செல்லப்பன் உள்பட ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story