தலைஞாயிறு பேரூராட்சியில் 2,843 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்


தலைஞாயிறு பேரூராட்சியில் 2,843 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்
x
தினத்தந்தி 30 July 2020 11:17 AM IST (Updated: 30 July 2020 11:17 AM IST)
t-max-icont-min-icon

தலைஞாயிறு பேரூராட்சியில் கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் 2,843 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

வாய்மேடு, 

தலைஞாயிறு பேரூராட்சியில் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் 2,843 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட துணை கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கால்நடைத்துறை மண்டல இயக்குனர் டாக்டர் சுந்தர் முன்னிலை வகித்தார். இதில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கினார். இதில் கூட்டுறவு சங்க தலைவர் அவை.பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராசு, மலர்விழி மற்றும் கால்நடை துறையினர் கலந்துகொண்டனர். முடிவில் கால்நடை மருத்துவர் முத்துக்குமரன் நன்றி கூறினார்.

Next Story