திருவாரூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,661 ஆக உயர்வு


திருவாரூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 112 பேருக்கு கொரோனா   பாதிப்பு எண்ணிக்கை 1,661 ஆக உயர்வு
x
தினத்தந்தி 30 July 2020 11:25 AM IST (Updated: 30 July 2020 11:25 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,661 ஆக உயர்ந்துள்ளது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் வரை 1,549 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர்். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100-ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,661 பேர் ஆக உயர்ந்துள்ளது.

இதில் திருவாரூர் பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் உள்பட 4 பேர், வலங்கைமான் பகுதியை சேர்ந்த ஒரு வயது குழந்தை உள்பட 6 பேர், குடவாசல், நன்னிலம் பகுதியை சேர்ந்த தலா 3 பேர், நீ்டாமங்கலம் பகுதியை சேர்ந்த 7 பேர், மன்னார்குடி பகுதியை சேர்ந்த 2 பேர் என மாவட்டம் முழுவதும் 112 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதிதாக வலங்கைமான் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story