ரேஷன் கடைகளில் ‘பயோ மெட்ரிக்’ முறையில் பொருட்கள் வினியோகம்


ரேஷன் கடைகளில் ‘பயோ மெட்ரிக்’ முறையில் பொருட்கள் வினியோகம்
x
தினத்தந்தி 30 July 2020 6:20 AM GMT (Updated: 30 July 2020 6:20 AM GMT)

ரேஷன் கடைகளில் ‘பயோ மெட்ரிக்’ முறையில் உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது.

பெரம்பலூர், 

பெரம்பலூர் தாலுகாவில் உள்ள 161 ரேஷன் கடைகளில் ‘பயோ மெட்ரிக்’ முறையில் உணவு பொருட்கள் நேற்று முதல் வினியோகம் செய்யப்பட்டது. ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் ஸ்மார்ட் கார்டு மூலம் உணவு பொருட்களை பெற்று வந்தனர். தற்போது ‘பயோ மெட்ரிக்’ முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம் குடும்ப அட்டையில் பெயர் உள்ள ஒரு நபர் ரேஷன் கடைக்கு நேரில் வந்து, தங்களது விரல் ரேகையை ‘பயோ மெட்ரிக்’ கருவியில் செய்த பின் அவரது ஆதார் அட்டை, குடும்ப அட்டையின் இணைக்கப் பட்டுள்ளதால், விரல் ரேகை பதித்ததும் குடும்ப அட்டையின் விவரம் தொடு திரையில் தோன்றும். விவரங்கள் சரிபார்க்கப் பட்டதும் அந்த குடும்ப அட்டை தாரருக்கு விற்பனையாளர் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. ‘பயோ மெட்ரிக்’ முறையால் குடும்ப அட்டையில் பெயர் இல்லாத வேறு ஒருவர் உணவு பொருட்களை வாங்க முடியாது, இதனால் முறைகேடுகள் தவிர்க்கப்படும் என்று விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

Next Story