நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு நடிகை ரியா சக்ரபோர்த்தி தலைமறைவு? போலீசார் விசாரிக்க சென்றபோது வீட்டில் இல்லை
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க பாட்னா போலீசார் மும்பை வந்தனர். நடிகை ரியா சக்ரபோர்த்தி வீட்டுக்கு சென்றபோது அவர் அங்கு இல்லை.
மும்பை,
இந்தி திரையுலகில் வளர்ந்து வந்த 34 வயது இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14-ந் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது சினிமா உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தநிலையில், சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி தான் தனது மகனை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது தந்தை பீகார் மாநிலம் பாட்னா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பாட்னா போலீசார் ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட சிலர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வீட்டில் இல்லை
இந்தநிலையில், சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக பாட்னா போலீசார் நேற்று முன்தினமே மும்பை வந்தனர்.
நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் விசாரணை நடத்துவதற்காக நேற்று பாட்னா போலீசார் மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் நடிகை ரியா சக்ரபோர்த்தியை வீட்டில் காணவில்லை. அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், தலைமறைவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
வங்கியில் விசாரணை
இதையடுத்து பாட்னா போலீசார் நடிகர் சுஷாந்த் சிங் கணக்கு வைத்திருந்த பாந்திராவில் உள்ள வங்கிக்கு சென்றனர். அங்கு சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்கில் மேற்கொள்ளப்பட்ட பணபரிவர்த்தனைகள் குறித்த விவரங்களை சேகரித்து விசாரணை நடத்தினார்கள். சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக மும்பை போலீசார் இதுவரை சேகரித்த ஆதாரங்கள் மற்றும் அவர்கள் பதிவு செய்த வாக்குமூலங்கள் குறித்த விவரங்களையும் பாட்னா போலீசார் கேட்டறிந்தனர்.
சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக அவரது முன்னாள் காதலி நடிகை அங்கிதா லோகண்டேயிடம் பாட்னா போலீசார் விசாரணை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.

Related Tags :
Next Story