காணொலி காட்சி மூலம் பொதுமக்களிடம் குறைகேட்ட போலீஸ் சூப்பிரண்டு


காணொலி காட்சி மூலம் பொதுமக்களிடம் குறைகேட்ட போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 31 July 2020 5:28 AM IST (Updated: 31 July 2020 5:28 AM IST)
t-max-icont-min-icon

காணொலி காட்சி மூலம் போலீஸ் சூப்பிரண்டு பொதுமக்களிடம் குறைகேட்டார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு குறைகள் தொடர்பாக புகார் அளிக்க வரும் பொதுமக்கள், போலீஸ் சூப்பிரண்டை நேரில் சந்தித்து மனுக்கள் அளிக்கும் வழக்கமான நடைமுறை தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக காணொலி காட்சி மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை, பொதுமக்கள் கண்டு தங்களது குறைகளை, புகார்களை எடுத்துக்கூறி வருகின்றனர். இந்த புதிய முறையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் காணொலி காட்சி மூலமாக குறைகளை கேட்டறிந்து அதற்கு தகுந்த தீர்வையும் கூறி வருகிறார். கொரோனா பரவல் குறையும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Next Story